1 sourceUpdated
கார்த்திகை நினைவுகூரலும் மாறிவரும் அரசியல் சூழலும்
கார்த்திகை மாதம் இலங்கையில் வாழும் இரு பிரதான மொழி பேசும் சமூகங்களும் தமது மண்ணுக்காகவும் கொள்கைகளுக்காகவும் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் ஒரு உணர்வுபூர்வமான காலப்பகுதியாகும்.
Summary
தமிழினம் தமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி மரணித்த முதலாவது வீரரான சங்கர் (சத்தியநாதன்) மரணித்த நாளான நவம்பர் 27ஆம் திகதியை 'மாவீரர் நாளாகப்' பிரகடனப்படுத்தி ஆண்டு தோறும் நினைவுகூருகின்றது. மறுபுறம், ஆயுதமேந்திப் போராடிய ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி), தமது அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான ரோஹண விஜேவீர கொல்லப்பட்ட நாளான நவம்பர் 13ஆம் திகதியை 'கார்த்திகை வீரர்கள் தினமாக' நினைவுகூருகின்றது.