1 sourceUpdated
இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தவித்த கடற்றொழிலாளர் – விரைந்து மீட்ட கடற்படை!
பேருவளைக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் இயந்திரக் கோளாறு காரணமாக ஆபத்துக்குள்ளான மீன்பிடிப் படகிலிருந்த கடற்றொழிலாளர் ஒருவரை இலங்கை கடற்…
Summary
கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கடற்படையினர் இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கடந்த நவம்பர் 21ஆம் திகதி நீர்கொழும்பு பிட்டிப்பன மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகக் கடலுக்குச் சென்ற OFAP-A-6309-NBO என்ற இலக்கத்தைக் கொண்ட டிங்கி ரகப் படகே இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்துள்ளது.
