1 sourceUpdated
ஜப்பானில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் கைது!
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் ஜப்பான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய விமானப் பணிப்பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
Summary
ஜப்பான் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு (Narita International Airport) அருகில் அமைந்துள்ள ஏஓன் (Aeon) வர்த்தக வளாகத்தில் பொருட்கள் திருடிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், திருடப்பட்டதாக குறிப்பிடப்படும் மேற்படி பல்பொருள் (Super market) அங்காடிக்கு அவர் சென்றுள்ளார்.
