1 sourceUpdated
அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இராணுவ மோதலை எதிர்கொள்வதற்கும் ஈரான் முன்னெப்போதையும் விட அதிகளவில் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
Summary
அடுத்தகட்ட நடவடிக்கை, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா காட்டும் விருப்பத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் நேரடி இராஜதந்திரப் பயணங்கள் ஊடாகத் தீவிர பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
