1 sourceUpdated
காசாவின் 99 சதவீதமான பகுதி மாசடைவு – ஆய்வில் தகவல்
இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதி மாசடைந்துள்ளதாக ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Summary
காசாவில் இஸ்ரேல் கட்டடங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்தமை எவ்வாறு பரவலான மாசடைதலுக்கு வழிவகுத்துள்ளது என்பதும் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது. காசாவில் அழிக்கப்பட்ட கட்டடங்களிலிருந்து வெளியாகும் கனரக உலோகங்கள், வெடிபொருள் எச்சங்கள் ஆகியவை தற்போது பலஸ்தீனியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அபாயகரமான பொருட்களில் அடங்கும்.