1 sourceUpdated
இடைநடுவில் கைவிடப்பட்ட 72 கல்விஅபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் வெளிப்படுத்தப்பட்டன கல்வி, உயர்கல்விமற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2021–2023 நிதியாண்டுகளுக்குரிய மூவாண்டு அறிக்கைகள், 2024 ஆம்ஆண்டுக்கான கணக்கா
கல்வி, உயர்கல்விமற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2021-2023 நிதியாண்டுகளுக்குரிய மூவாண்டு அறிக்கைகள், 2024 ஆம்ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆகியவற்றை ஆராய்வதற்காக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர்ஹாசீம் தலைமையில் அண்மையில் (19) பாராளுமன்றத்தில் கூடியஅரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் 2018-2021காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 72அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
Summary
எவ்வாறாயினும், குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர். தேசிய கல்வி முகாமைத்துவத்தகவல் கட்டமைப்பின் (NEMIS)முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஆசிரியர் தகவல்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பீட்டுத் தரவுகளை உள்ளீடுசெய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
