1 sourceUpdated
யாழில் விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி...!
யாழில் விபத்தில் சிக்கி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இன்று (04-11-2026) இவ்விபத்து சம்பவத்துள்ளது.
Summary
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.
