1 sourceUpdated
வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் : அமைச்சரின் அறிவிப்பு
வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
Summary
அத்துடன் இந்த மாகாணங்களில் மக்களுக்கு சொந்தமான உறுதிப் பத்திரமுள்ள காணிகள் அல்லது மக்கள் இதற்கு முன்னர் பயன்படுத்திய காணிகளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
