1 sourceUpdated
சுபோதினி அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்
ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட 'சுபோதினி' அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Summary
யாழ்ப்பாணத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகந்தநேசன் புயல்நேசன் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஆசிரியர்களின் சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்குத் தமது சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
