1 sourceUpdated
இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை வழங்குவது தொடர்பாக அஜர்பைஜான் மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் அரச சேவை வழங்கல் செயல்முறையை மேலும் நவீனமயப்படுத்தி வினைத்திறன் மிக்கதாக மாற்றும் நோக்கில், இலங்கையின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் அஜர்பைஜானின் ASAN Service நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 07ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
Summary
இவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கையின் அரச சேவை வழங்கல் செயல்முறையுடன் தொடர்புடைய துறைகளில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிப் பயிலுநர் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
