1 sourceUpdated
மனித – யானை மோதலைக் குறைப்பதற்கான வனவிலங்கு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன
புத்தளம் வனவிலங்கு வலயத்தின் ஐந்து யானை கட்டுப்பாட்டு பிரிவுகளுக்கு புதிய சிங்கிள் கெப் வாகனங்கள் மனித - யானை மோதலைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும், வனவிலங்கு அதிகாரிகளின் களப்பணிகளுக்கான வசதிகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, புத்தளம் வனவிலங்கு வலயத்தின் ஐந்து யானை கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு ஐந்து புதிய சிங்கிள் கெப் வாகனங்கள் வழங்கும் நிகழ்வு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களின் தலைமையிலும், சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி அவர்களின் பங்கேற்புடனும் கடந்த 24ஆம் திகதி புத்தளம் உதவி வனவிலங்கு வலய அலுவலகத்தில் நடைபெற்றது.
Summary
குறிப்பாக, யானைகள் கிராமங்களுக்குள் புகும் சம்பவங்களின்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்வது, யானைகளை விரட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது, ஆபத்தான நிலைமைகளைக் கண்காணிப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்ற பணிகளுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை பாரிய தடையாக இருந்து வந்தது.
