Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
Fuel & stocksCPC pump prices; the CSE is coming
  • Fuel prices
  • Colombo Stock ExchangeSoon
Card OffersTools
ENසිංதமி

Display

Text size

Contrast

HomeTrendingLatestLocalPoliticsInternationalBusinessSportsScience & TechWeatherGossipsEntertainmentEducationCrime & CourtsHealth
Sources

News Sources (30 available)

Ada Derana
Ada Derana Biz
Asian Mirror
Ceylon Today
Citizen News
Colombo Gazette
Colombo Telegraph
Daily FT
Daily Mirror
EconomyNext
ESPN Cricinfo
Examiner
Fact Crescendo
Gossip Lanka News English
Groundviews
Hiru News - English
Lanka Business Online
Lanka News Web
Lanka Truth
Mawrata News
News First
News.lk
NewsWire English
OCCRP
Siyatha News
Sri Lanka Cricket
Sri Lanka Mirror
Sunday Observer
The Island
ThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Card offers
  • Tools
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Politics

1 source·Updated 1h ago

நவம்பர் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

நவம்பர் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இன்று (30) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணிக்கு 1983 கறுப்பு யூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தவாறு அன்றைய தினம் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமலிருக்கத் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2508/27 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெறவுள்ளது. (அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில்) இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் தனியார் உறுப்பினர் பிரேரணை சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல் லசித் பாஷண கமகே வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல், ரவீந்திர பண்டார சூட்டிகை வலுசக்திக் கட்டமைப்பையும் சூட்டிகை மின் மானிகளையும் அறிமுகம் செய்தல், ரோஹண பண்டார நீச்சல் திறமைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயார் செய்தல் உபுல் கித்சிறி உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல், சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க நீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல் இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Share this story

Lead report

Image: News.lkNews.lk•1h agoநவம்பர் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டனRead on News.lk

What this story is about

Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.

People
  • ஹிருணி விஜேசிங்க
  • குஷானி ரோஹணதீர
  • ஹேஷா விதானகே
  • ரிஸ்வி சாலி
Organisations
  • உயர்நீதிமன்றம்
Places
  • உபுல் கித்சிறி உடவளவை
  • லசித் பாஷண கமகே
  • Sri Lanka
  • Puttalam
Keywords
  • ஒதுக்கப்பட்டுள்ளது
  • தீர்மானிக்கப்பட்டன
  • விவாதத்திற்கு
  • வாரத்திற்கான
  • பாராளுமன்ற
  • அலுவல்கள்
  • நவம்பர்
  • அமர்வு
  • மணி

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Oct 30, 4:48 PM

More in Politics

Politics
  • Retired Justice Vijith Malalgoda appointed Chairman of Human Rights Commission3 sources·1h ago
  • Presidential Advisory Council to guide A’pura sacred area development4 sources·1h ago
  • No-confidence motion against Speaker will not be debated on Nov. 3 – Bimal5 sources·2h ago
  • Minister denies suspension of Aswesuma benefits for 1.4 million people4 sources·3h ago
  • HRW: Organised Crime Bill violates rights standards9 sources·6h ago

Trending stories

Trending
  1. 1Sri Lanka’s Colombo inflation edges up to 8.3% in October6 sources
  2. 2No-confidence motion against Speaker will not be debated on Nov. 3 – Bimal5 sources
  3. 3Retired Justice Vijith Malalgoda appointed Chairman of Human Rights Commission3 sources
  4. 4Presidential Advisory Council to guide A’pura sacred area development4 sources
  5. 5Court fixes date to consider revision applications of Rakhitha Rajapaksa13 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health