2 sourcesUpdated
சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
சீரற்ற வானிலை மற்றும் 'ஒர்னாப்' (Ornab) புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
Full coverage
Summary
இதன்படி, நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 136 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 5,768 குடும்பங்களைச் சேர்ந்த 21,240 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தால் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 நபர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
