1 sourceUpdated
நீதிகோரி கிளர்ந்தெழுந்த மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள்!
அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அப்பகுதியில் 1750 ஏக்கர் நிலப்பரப்பை முதற்கட்டமாக மேய்ச்சல்தரையாக வர்த்தமானிப் பிரகடனம் செய்வதாகத் தெரிவித்துச் சென்றிருந்தார்.
Summary
அதுதொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் நீதிமன்றத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை, இப்பருவத்தில் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை அந்த இடங்களில் மேய்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இரு திணைக்களங்களும் நேரடியாகக் களத்திற்குச் சென்று நடவடிக்கை எடுக்கப் பொறுப்பேற்றுள்ளன.