1 sourceUpdated
இந்தியாவுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவு! புதுடெல்லியில் ஜெய்சங்கர் வழங்கிய உறுதி
இந்தியாவுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவானது, புதுடெல்லியின் பரந்த அண்டை நாடுகளுடனான ஈடுபாட்டின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விவரித்துள்ளார்.
Summary
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், "கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புப் பயணத்தின்போது, இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இராணுவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன், பயிற்சியும் திறன் மேம்பாடும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய அங்கங்களாகத் தொடர்கின்றன.
