1 sourceUpdated
கிளிநொச்சி யுவதி விவகாரம்:சந்தேக நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: வெளியான தகவல்
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முறையே 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Summary
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று(10) கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தச் சோதனைகளின்போது, சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
What this story is about
Places
