1 sourceUpdated
என்.பி.பி ஆட்சியிலுள்ள பேருவளை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள பேருவளை நகர சபையின் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
Summary
நகர சபைச் தலைவர் மொஹமட் மாபாசிம் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இன்று (10) நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போதே இந்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெற்றதுடன், வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தை ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்காமை குறித்துச் சபை அமர்வின் முடிவில் ஊடகவியலாளர்கள் தலைவரிடம் கேள்வியெழுப்பினர்.
