1 sourceUpdated
“எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாகத் தடுமாறுகின்றனர்”
எதிர்க்கட்சியினருக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகச் செயற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் தடுமாறுவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்தார்.
Summary
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் நேற்று (05) உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக 13 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.