1 sourceUpdated
வெலிமடை பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த 170 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்
திட்வா அனர்த்த நிலைமை காரணமாக வீடுகளை இழந்த மற்றும் அதிக ஆபத்துமிக்க வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த 170 குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் நாளை (06) ஆரம்பிக்கப்படவுள்ளது.
