1 sourceUpdated
ரூ. 2,600 மில்லியன் கரும்புல்லியன் நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சுமார் ரூ. 2,600 மில்லியன் முதலீட்டில் கட்டப்பட்ட கரும்புல்லியான் நீர் வழங்கல் திட்டம் நேற்று (24) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பகுதிகளில் உள்ள சுமார் 23,600 மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்க உள்ளது.
