1 sourceUpdated
குக் தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண் - நியூசிலாந்தின் உதவியை நாடிய இலங்கை
குக் தீவுகளில் சிக்கியுள்ள இலங்கைப் பிரஜையான ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவைப் பாதுகாப்பாகவும் விருப்பத்துடனும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான இணை அமைச்சரின் தனிப்பட்ட தலையீட்டை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
Summary
இது தொடர்பாக ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கெமரன் ப்ரூவருக்கு (Cameron Brewer) உத்தியோகபூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
