1 sourceUpdated
ஒரே நாளில் 40 எருமைகள் உயிரிழப்பு!
மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறிய குளம் கிராமத்தில், அடையாளம் காணப்படாத நோய் பரவியதையடுத்து ஒரே பண்ணையில் சுமார் 40 எருமைகள் உயிரிழந்துள்ளன.
Lead report
Summary
கடந்த 02ஆம் திகதி மாலை முதல் 03ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில், இரண்டு தொழுவங்களில் இருந்த சுமார் 40 எருமைகள் உயிரிழந்துள்ளதாகப் பண்ணை உரிமையாளர் தாரக சங்கீத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பண்ணை உரிமையாளர் தாரக சங்கீத் தெரிவிக்கையில், "கடந்த 02ஆம் திகதி ஒரே தடவையில் 5 எருமைகள் உயிரிழந்தன. தொடர்ந்து 03ஆம் திகதி மாலை வரையில் எனது பண்ணையில் சுமார் 40 எருமைகள் உயிரிழந்துவிட்டன.