1 sourceUpdated
வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் சில மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
Summary
அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களின் தேர்தலே இவ்வாறு நடத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் அந்த பரிந்துரைகள்,யோசனைகளுக்கு அமைய இதுவரையில் சாதகமான தீர்மானங்கள் அல்லது உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
