1 sourceUpdated
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு - அநுர அரசை எச்சரிக்கும் தரப்பு
தற்பொதைய அரசு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதனக் கோரிக்கைகளை மறந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Summary
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியுள்ள வேதனத் திருத்தத்தை உடனடியாக வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதியை வலியுறுத்தி, கடந்த ஜூன் 26ஆம் திகதி 10,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொழும்பில் ஒன்றுகூடிப் போராட்டத்தில் அவர்களில் ஒருவர் இன்றுவரை கண்பார்வையை இழந்த நிலையில் இருப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
