1 sourceUpdated
பயில்வான் ரெங்கநாதனிடம் பொலிஸார் அதிரடி விசாரணை!
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
Summary
இதையடுத்து, தனது மகள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நடிகர் அர்ஜுன் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சைபர் கிரைம் பொலிஸார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் நேரில் ஆஜரானார்.
