1 sourceUpdated
நாட்டுக்குள் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘நிழல் அரசு’ - எச்சரிக்கும் ஜனாதிபதி அநுர
இலங்கைக்குள் சக்திவாய்ந்த 'நிழல் அரசு' ஒன்று உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Summary
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அலரி மாளிகையில் நடைபெற்ற மதத் தலைவர்கள் மாநாட்டில் உரை யாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட குற்றவியல் அரச கட்டமைப்புக்கு ஆதரவானவர்கள், அதற்கு எதிரானவர்கள் என நாடு தற்போது இரு தரப்புகளுக்கு இடையிலான சவாலை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
