2 sourcesUpdated
‘அர்னாப்’ புயலின் தாக்கத்தினால் கடலில் காணாமல் போன குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்
2026 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'ஈகல்' (IMUL-A-0022-TLE) எனும் பலநாள் மீன்பிடிப் படகு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில், 'அர்னாப்' புயலின் தாக்கத்தினால் காணாமல் போன குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த நான்கு (04) மீனவர்களையும் தேடுவதற்காக இலங்கை கடற்படையினரால் கூட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பயனாக, குறித்த நான்கு (04) மீனவர்களும் இன்று (2026 நவம்பர் 03) காலை இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
Summary
'அர்னாப்' புயலின் தாக்கத்தினால் குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களும், 'ஈகல்' பலநாள் மீன்பிடிப் படகும் இலங்கை கடற்படையினரின் கூட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

