1 sourceUpdated
ஷிரந்தி ராஜபக்ச நாடு திரும்பத் தவறினால் ஏற்படப்போகும் விளைவு : பிரதி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரங்களை நாட்டின் சட்ட அமைப்பின் ஊடாக விசாரிப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
Summary
அரசியல் குற்றங்கள், கொலைகள் அல்லது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான செயல்களுக்குப் பொறுப்பானவர்கள், நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று குணசேகர குறிப்பிட்டார். குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளின் முடிவுகளைப் பொறுத்தே சட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் தன்மையும் அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.
