1 sourceUpdated
சிறுமி மீது தண்ணீர் ஊற்றும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் என பரவும் காணொளி உண்மையா?
எனவு எமது ஆய்வின் அடிப்படையில், இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பாலஸ்தீனக் குழந்தை மீது தண்ணீர் ஊற்றிச் சிரிப்பதாக பரவும் இந்த காணொளி உண்மையான சம்பவம் அல்ல எனவும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. காட்சிகளில் உள்ள முரண்பாடுகள், சர்வதேச ஊடகங்களின் உறுதிப்படுத்தல், செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியின் முடிவு ஆகிய அனைத்தும் இதையே சுட்டிக்காட்டுகின்றன.
Summary
காஸாவில் இடிபாடுகளுக்கு நடுவே தரையில் சுருண்டு அழும் சிறுமியின் மீது, இரண்டு இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பிளாஸ்டிக் போத்தலிலிருந்து தண்ணீர் ஊற்றிச் சிரிப்பது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதே காணொளியை இத்தாலிய ஊடகங்களான ஓபன் மற்றும் ஃபாக்டா ஆகியவையும் ஆய்வு செய்து அறிக்கையிட்டிருந்தமையை எமது ஆய்வுகளின் மூலம் அறிய முடிந்தது.
