1 sourceUpdated
ரகித ராஜபக்ஷவின் வீட்டுக்கு திடீரென சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகள்!
முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவின் வீட்டுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (28) இரவு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Summary
ரகித ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்காகவே, ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். எனினும், அந்த நேரத்தில் ரகித ராஜபக்ஷவும் அவரது சாரதியும் தமது கையடக்கத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்ததாகக் கூறப்படுகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
