1 sourceUpdated
குட்டிமணி, தங்கதுரைக்கு சிலை நிறுவும் விவகாரம்: சதீஸிடம் 3 மணி நேர விசாரணை
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம், பயங்கரவாத தடுப்புப் பிரிவு (TID) காவற்துறையினர் யாழ். நகரில்...
Summary
நகரில் உள்ள தமது அலுவலகத்தில் வைத்து சுமார் மூன்று மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஸ்தாபக தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவ முயற்சித்த விவகாரம் தொடர்பிலேயே, நேற்றைய தினம் சனிக்கிழமை (07) இரண்டாவது தடவையாக சதீஸிடம் இக் காவற்துறை விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
