1 sourceUpdated
அம்பாறையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது!
அம்பாறையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (22-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Summary
அத்துடன் குறித்த சந்தேகநபரின் உதவியாளர்களாகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதுடன் அவர்கள் வசம் இருந்தும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சாய்ந்தமருது காவல்துறையினர் மேலதிகவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
What this story is about
Organisations
Places
